
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பூஞ்ச் செக்டாரில் அடர்ந்த வனப்பகுதியில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை தேடி கண்டுபிடிக்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டு வருகிறது.
இந்த தேடுதல் வேட்டையில் ஒரு இடைநிலை அதிகாரி உட்பட இரண்டு வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். அவர்கள் இருவரும் ரைஃபிள்மேன் விக்ரம் சிங் நெகி மற்றும் ரைஃபிள்மேன் யுகாம்பர் சிங் என தெரிய வந்துள்ளது.
இதையொட்டி கடந்த சில நாட்களில் பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.