சீன எல்லையோரம் உள்ள தவாங் செல்ல கட்டப்படும் இரண்டு புதிய வழிகள் !!

அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள தவாங் பகுதிக்கு செல்ல அஸாமின் குஹவாத்தியில் இருந்து இரண்டு புதிய வழிகள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன.

மேற்கு பகுதியில் வரும் பாதை அடுத்த இரண்டு ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வரும் எனவும் மத்திய பகுதி பாதைக்கான ஆய்வு பணிகள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.

இந்த பாதைகள் மக்களுக்கும் உள்ளூர் பொருளாதாரத்திற்கும் பேருதவியாக அமையும் அதே நேரத்தில் ராணுவ நகர்வுகளுக்கும் வரப்பிரசாதமாக அமையும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த இரண்டு பாதைகளும் பனி படர்ந்த நெச்சிபூலா மற்றும் சேலா கணவாய்களுக்கு செல்லாமலேயே சீக்கிரம் தவாங் செல்ல உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.