
சீனா தனது ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளில் திபெத்தியர்களை அதிகளவில் வலுக்கட்டாயமாக சேர்க்க முயன்று வருகிறது ஆனால் திபெத்தியர்கள் சேர மறுக்கறார்கள்.
சீனாவின் இந்த முயற்சிக்கு காரணம் திபெத்தியர்கள் உயர்ந்த பகுதிகளில வாழ்பவர்கள் ஆகவே அதிக உயர பகுதிகளில் சிறப்பாக செயல்பட முடியும் ஆனால் சமவெளி பகுதகளில் இருந்து வரும் வீரர்களால் அத்தகைய சூழல்களை சமாளிக்க முடியவில்லை.
நங்காரி மாகாணம் மற்றும் சும்பி பள்ளதாக்கு பகுதிகளில வீட்டுக்கு ஒருவர் படைகளில் இணைய வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது ஆனால் வெறும் 63 பேர் மட்டுமே இணைந்துள்ளனர்.
இவர்களுக்கு நல்ல ஊதியம் மற்றும் பல சலுகைகள் வழங்கப்படும் என அறிவித்தும் திபெத்தியர்கள் சேர மறுக்கின்றனர்.
படையில் இணைந்தவர்களுக்கு தற்போது இரண்டு இடங்களில் உடற்பயிற்சி ஆயுதபயிற்சி மற்றும் இதர ராணுவ பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இவர்களை சீனா இந்தியா உடனான எல்லையோரம் பயன்படுத்தி கொள்ள திட்டமிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.