விரைவில் 3 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட ட்ரோன் ஒப்பந்தம் !!

  • Tamil Defense
  • October 27, 2021
  • Comments Off on விரைவில் 3 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட ட்ரோன் ஒப்பந்தம் !!

அமெரிக்காவிடம் இருந்து இந்தியா விரைவில் 30 ப்ரடேட்டர் ஆளில்லா விமானங்களை வாங்குவதற்கான 3 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை இறுதி செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ப்ரடேட்டர் ட்ரோன்கள் தான் உலகின் முதலாவது ஆயுதம் தாங்கிய தொலைதூர அதிக உயரம் பறக்கும் திறன் கொண்ட ஆளில்லா விமானங்கள் என்பதும்

950 குதிரைசக்தி திறன் கொண்ட இந்த ட்ரோன்கள் தனது எடையை விட 15 மடங்கு அதிகமான எடைகளை சுமந்து கொண்டு சுமார் 27 மணிநேரம் வரை தொடர்ந்து பறக்கும் ஆற்றல் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சீனா தனது உள்நாட்டு தயாரிப்பு ஆயுதம் தாங்கிய ட்ரோன்களை இயக்கி வருவதும், அதே ட்ரோன்களை பாகிஸ்தான் இயக்கி வரும் நிலையில் தற்போது கூடுதலாக துருக்கியிடம் இருந்து ஆயுதம் தாங்கிய ட்ரோன்களை வாங்க முயற்சி செய்து வருகிறது.

டொனால்ட் ட்ரம்ப் அதிபராக இருந்த நேரத்தில் இந்தியா இந்த ட்ரோன்களை வாங்க முயற்சித்தது ஆனால் பலனளிக்கவில்லை அப்போது இந்திய தரைப்படை ஹன்டர் எனும் மற்றோரு ட்ரோனையும் வாங்க விரும்பியது.

மேலும் இந்தியாவுக்கு சீனா மற்றும் பாகிஸ்தானிடம் இருந்து ஆபத்து இருக்கும் அதே நேரத்தில் சீனா உடனான எல்லை பிரச்சினைக்கு இடையே இதனை உடனேயே இறுதி செய்ய இந்தியா விரும்புகிறது.