
ஃபிரான்ஸ் நாட்டை சேர்ந்த தேல்ஸ் நிறுவனமானது உலகளவில் மிகவும் முக்கியமான பாதுகாப்பு துறை நிறுவனமாகும் இது பல்வேறு வகையான பாதுகாப்பு தொழில்நுட்பங்களை வழங்கி வருகிறது.
தற்போது அந்த நிறுவனம் இந்தியாவின் ராணுவத்திற்கு சைபர் பாதுகாப்பு தொழில்நுட்ப வசதிகளை தர ஆர்வம் காட்டி வருகிறது இதை அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி பேட்ரீஸ் கேய்ன் உறுதிப்படுத்தி உள்ளார்.
இந்திய தரைப்படை இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடற்படை ஆகியவை மிக நீண்ட காலமாக வருங்கால தொழில்நுட்பங்களை பெற தீவிர முனைப்பு காட்டி வருகின்றன.
அந்த வகையில் தேல்ஸ் நிறுவனம் தற்போது இந்தியாவில் தனது இருப்பை விரிவுபடுத்தி கொள்ள விரும்புகிறது சைபர் பாதுகாப்பு ரோபோட்டிக்ஸ் மின்னனு போர்முறை மற்றும் செயற்கை நுண்ணறிவு திறன்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்த உள்ளது.
மேலும் இந்தியா அடுத்த ஐந்து வருடங்களில் சுமார் 300 பில்லியன் அமெரிக்க டாலர்களை பாதுகாப்பு துறையில் செலவீட உள்ளது ஆகவே தேல்ஸ் நிறுவனம் தற்போதே தன்னை தயார்படுத்தி கொள்கிறது என கூறப்படுகிறது.