
ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரியும் பாதுகாப்பு வல்லுனருமான மேஜர் ஜெனரல் திபங்கர் பானர்ஜி ஆஃப்கன் வீழ்ச்சிக்கு பிறகு பயங்கரவாத குழுக்கள் காஷ்மீர் மீது கவனம் செலுத்தி வருவதாக கூறியுள்ளார்.
லஷ்கர் இ தொய்பா ஜெய்ஷ் இ மொஹம்மது மற்றும் இதர இயக்கங்கள் மூலமாக காஷ்மீரில் தாக்குதல்கள் பாகிஸ்தான் ஒருங்கிணைத்து நடத்தி வருவதாகவும் கூறினார்.
சமீப காலங்களில் காஷ்மீரில் பயங்கரவாதிகளின் அடாவடித்தனம் சற்றே அதிகரித்துள்ளதை தெளிவாக பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.