
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தில் அம்மாநில காவல்துறையினர் நடத்திய என்கவுன்டரில் ஹைபிரிட் பயங்கரவாதி ஒருவன் கொல்லப்பட்டு உள்ளான்.
மேலும் அவனது பெயர் ஜாவேத் அஹமது வானி எனவும் ஏதேனும் ஒரு கடைக்காரரை கொல்லும் நோக்கில் செயல்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது.
இவன ஏற்கனவே இரண்டு வெளி மாநில சாலையோர வியாபாரிகளை கொன்ற குல்சார் உடன் நெருங்கிய தொடர்பில் இருந்தது தெரிய வந்துள்ளது.
கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து ஒரு கைத்துப்பாக்கி, ஒரு நிரம்பிய மேகஸின் மற்றும் ஒரு கையெறி குண்டு ஆகியவை கண்டெடுக்கப்பட்டன என தகவல்கள் தெரிவிக்கின்றன.