
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் செக்டாரில் நடைபெற்று வரும் என்கவுன்டரின் போது பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஜியா மூஸ்தஃபா எனும் பயங்கரவாதி கொல்லப்பட்டான்.
இதுபற்றி அதிகாரிகள் கூறிய போது இவன் 14 ஆண்டுகளாக சிறையில் இருந்ததாகவும் தற்போது இந்த காட்டில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளின் பதுங்குமிடம் ஒன்றிற்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டதாகவும்
அப்போது அங்கு பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகள் உடனான தொடர்பை அவன் ஒப்பு கொண்டதாகவும் அப்போது தீடிரென பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் ஜியா உட்பட மூன்று பாதுகாப்பு படையினருக்கு பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது, இதில் ஜியா இறந்த நிலையில் பிற்பகல் அவனது உடல் கண்டு பிடிக்கப்பட்டதாகவும் கூறினர்.
இந்த ஆபரேஷன் தான் இந்திய ராணுவத்தின் வரலாற்றிலேயே மிகவும் நீண்டதும் நெடியதுமான ஆபரேஷன் என்பது குறிப்பிடத்தக்கது.