காஷ்மீரில் பயங்கரவாதிகளின் புதிய பாணி, தொடரும் பொதுமக்கள் மீதான தாக்குதல் !!

  • Tamil Defense
  • October 7, 2021
  • Comments Off on காஷ்மீரில் பயங்கரவாதிகளின் புதிய பாணி, தொடரும் பொதுமக்கள் மீதான தாக்குதல் !!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ராணுவம், துணை ராணுவம் மற்றும் காவல்துறையினரால் பயங்கரவாதிகள் மிக கடுமையாக ஒடுக்கப்பட்டு வரும் நிலையில்,

தற்போது அப்பாவி பொதுமக்கள் மீது தங்களது கவனத்தை திருப்பி உள்ளனர், இது பொதுமக்கள் மீதான தாக்குதல்களில் தொடர்ந்து வெளிப்பட்டு வருகிறது.

நேற்று ஶ்ரீநகரில் ஒரு மருந்துகடை உரிமையாளர் வீட்டுக்கு செல்லும் வழியில் பயங்கரவாதிகளால் பட்டபகலில் ரோட்டில் வைத்து சுட்டு கொல்லப்பட்ட நிலையில்

இன்று காலை மீண்டும் ஶ்ரீநகரில் சதிந்தர் கவுர் எனும் ஆசிரியையும், தீபக் சந்த் எனும் ஆசிரியரும் பட்டபகலில் பயங்கரவாதிகளால் சுட்டு கொலை செய்யப்பட்டு உள்ளனர்.