மலேசிய போர் விமான தேர்வில் வெளியேற்றப்பட்ட சீனா, போட்டியில் நிலைத்த தேஜாஸ் !!

  • Tamil Defense
  • October 24, 2021
  • Comments Off on மலேசிய போர் விமான தேர்வில் வெளியேற்றப்பட்ட சீனா, போட்டியில் நிலைத்த தேஜாஸ் !!

மலேசியா தனது விமானப்படைக்கு போர் விமானங்களை வாங்குவதற்காக தேர்வுகளை நடத்தி வருகிறது இந்த போட்டியில் துருக்கி இத்தாலி சீனா தென்கொரியா ரஷ்யா இந்தியா ஆகிய நாடுகள் உள்ளன.

ஒன்பது போட்டியாளர்கள் தேர்வில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டிய நிலையில் ஆறு போட்டியாளர்கள் மட்டுமே விமானங்களை அனுப்பியுள்ளனர்.

அந்த வகையில் சீனா பாகிஸ்தான் தயாரிப்பு ஜே.எஃப்-17, செக் நாட்டின் L-39NH மற்றும் அமெரிக்க டி7ஏ ஆகியவை தற்போது போட்டியில் இல்லை என்பது உறுதி ஆகியுள்ளது.

மலேசியா முதல்கட்டமாக 18 விமானங்களை வாங்க உள்ளது பின்னர் சில காலம் கழித்து 18 விமானங்களை வாங்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

முதல் 10 விமானங்கள் பயிற்சி விமானங்களாகவும் மீதமுள்ள எட்டு விமானங்களும் தரை மற்றும் வான் தாக்குதல் பணிகளை மேற்கொள்ள பயன்படுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.