ரஷ்யாவில் கடலில் இறக்கப்பட்ட இந்திய கடற்படைக்கான புதிய ப்ரிகேட் ரக போர்க்கப்பல் !!

  • Tamil Defense
  • October 30, 2021
  • Comments Off on ரஷ்யாவில் கடலில் இறக்கப்பட்ட இந்திய கடற்படைக்கான புதிய ப்ரிகேட் ரக போர்க்கப்பல் !!

ரஷ்யாவின் யாந்தர் கப்பல் கட்டுமான தளத்தில் கட்டுப்பட்டு வரும் ஐ.என.எஸ் துஷில் ஃப்ரிகேட் ரக போர்க்கப்பல் முதல் முறையாக கடலில் இறக்கப்பட்டது.

ப்ராஜெக்ட் பி1135.6 ரக கப்பல்களில் ஏழாவதான இதற்கு துஷில் என பெயரிடப்பட்டுள்ளது இதற்கு கேடயம் என தமிழில் பொருள்படும்.

இதற்கான விழாவில் ரஷ்யாவுக்கான இந்திய தூதர பால வெங்கடேஷ் வர்மா, மூத்த ரஷ்ய மற்றும் இந்திய கடற்படை அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த பி1135.6 ரக ஃப்ரிகேட் போர்க்கப்பல்களில் இரண்டு ரஷ்யாவிலும் மற்றும் இரண்டு இந்தியாவின் கோவா கட்டுமான தளத்தில் கட்டப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.