1 min read
தஜிகிஸ்தான் எல்லையில் தற்கொலைப்படையினரை குவிக்கும் தாலிபான்கள் !!
ஆஃப்கானிஸ்தான் நாட்டின் எல்லைகளில் தற்கொலைப்படை பயங்கரவாதிகளை நிலைநிறுத்த வேண்டி ஒரு புதிய படையணியை தாலிபான்கள் உருவாக்கி உள்ளனர், இதன் பெயர் லஷ்கர் இ மன்சூரி ஆகும்.
இவர்கள் தஜிகிஸ்தான் நாட்டுடன் எல்லையை பகிரும் படாக்ஷன் மாகாணத்தில் அதிக அளவில் குவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாலிபான்கள் இந்த படையணியை பெரிதும் மதிக்கின்றனர், அமெரிக்க மற்றும் ஆஃப்கன் படைகளின் வீழ்ச்சி இந்த தற்கொலை படை வீரர்கள் இன்றி சாத்தியமில்லை எனவும்,
இந்த வீரர்கள் எதற்கும் அஞ்சாமல் வெடிகுண்டுகளை சுமந்து சென்று அல்லாவுக்காக தங்களது உயிரை துறக்க துணிந்தவர்கள் என அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.