எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்த பாகிஸ்தான் உளவாளி கைது !!

  • Tamil Defense
  • October 26, 2021
  • Comments Off on எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வந்த பாகிஸ்தான் உளவாளி கைது !!

எல்லை பாதுகாப்பு படையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியை சேர்ந்த மொஹம்மது சஜ்ஜாத் கான்ஸ்டபிள் ஆக பணியாற்றி வந்தான்.

இவன் பாகிஸ்தானுடை ஐ.எஸ்.ஐ அமைப்பிற்கு உளவு பார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளான் அந்த வகையில் ரகசிய ஆவணங்களை கொடுக்கும் போது குஜராத் மாநிலம் காந்திநகரில் கைது செய்யப்பட்டான்.

இவன் எல்லை பாதுகாப்பு படையில் இணைவதற்கு முன்பு பாகிஸ்தான் சென்றதும் அங்கு 46 நாட்கள் தங்கியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.