புதிய இஸ்ரேலிய ட்ரோன்களின் சிறப்பம்சங்கள் என்னென்ன ?? ஒரு பார்வை !!

  • Tamil Defense
  • October 2, 2021
  • Comments Off on புதிய இஸ்ரேலிய ட்ரோன்களின் சிறப்பம்சங்கள் என்னென்ன ?? ஒரு பார்வை !!

இந்தியா இஸ்ரேலுடன் கடந்த ஜனவரி மாதம் நான்கு ஹெரோன் ட்ரோன்களை வாங்க ஒப்பந்தம் செய்து கொண்டது.

ஆனால் உலகளாவிய பெருந்தொற்று காரணமாக அவற்றின் டெலிவரி தொடர்ந்து தள்ளிபோய் கொண்டே இருந்தது.

தற்போது மீண்டும் இவற்றின் டெலிவரிக்கான பணிகள் துவங்கி உள்ளன டிசம்பர் மாதத்திற்கு முன் அனைத்து ட்ரோன்களும் டெலிவரி ஆகும் என தெரிகிறது.

இவை நீண்ட தூரம் பறக்கவும், சுமார் 35,000 அடி உயரம் வரை செல்லும் திறன்களையும் கொண்டவை ஆகும்.

இவற்றின தொலைதூர் ரேடார்கள் மற்றும் சென்சார்கள் உதவியோடு எல்லை கட்டுபாட்டு கோட்டுக்கு அருகில் கூட செல்லாமல் தகவல்களை சேகரிக்க முடியும்.

இந்திய விமானப்படை ப்ராஜெக்ட் சீட்டா திட்டத்தின் கீழ் சீன எல்லையோரம் சுமார் 90 ஹெரோன் ட்ரோன்களை பயன்படுத்தி கண்காணிக்க திட்டமிட்டு உள்ளது.

தற்போதைய நிலையில் இந்திய விமானப்படையில் 68 ஹெரோன் ட்ரோன்கள் உட்பட சுமார் 180 இஸ்ரேலிய ட்ரோன்கள் பயன்பாட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.