
தலைநகர் தில்லியில் தேசிய காவலர் நினைவகத்தில் இருந்து சுதந்திரம் அடைந்த 75 ஆண்டுகளின் கொண்டாட்டத்தை ஒட்டி ITBP நடத்தும் சைக்கிள் ராலியின் 4வது கட்டம் துவங்கியது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சைக்கிள் ராலியை கொடியசைத்து துவங்கி வைத்த இந்தோ திபெத் எல்லை காவல்படையின் இயக்குனர் ஜெனரல் சஞ்சய் அரோரா இ.கா.ப ஊடகத்துறையினரிடம் பேசினார்.
அப்போது இந்திய சீன எல்லையோரம் நடைபெறும் ஊடுருவல்கள் குறித்து ஊடகத்தினர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் சிறிய அளவில் ஊடுருவல்கள் நடைபெறுவது உண்மை தான் எனவும்,
ஆனால் இந்தோ திபெத் எல்லை காவல்படை தகுந்த பதிலடியை கொடுத்து வருவதாகவும் கல்வானில் எங்களது திறனை நிருபித்தோம் தொடர்ந்து எதிர்காலத்திலும் நாங்கள் அதனை செய்து காட்டுவோம் என்றார்.
மற்றொரு மூத்த இந்தோ திபெத் எல்லை காவல்படை அதிகாரி கூறுகையில் இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இதுவரை எல்லையை சரிவர வகுக்கவில்லை இதனால் கருத்து வேறுபாடுகள் நிலவுகிறது.
ஆகவே இத்தகைய குழப்மத்தின் காரணமாகவே இருதரப்பு படைகளும் மற்றொருவரின் பகுதியில் தவறுதலாக நுழையும் போது அது ஊடுருழல் ஆகி விடுகிறது எனவும்,
மேலும் அந்த பகுதி தங்களது நாட்டுக்கு உரியது என இருதரப்பும் வாதிடுவது மேலும் சிக்கலான நிலைமையை ஏற்படுத்தி விடுகிறது என கூறினார்.