
இந்திய கடற்படையானது தனது பழைய மிக்29 போர் விமானங்களை மாற்றி விட்டு புதிய அதிநவீனமான போர் விமானங்களை பெற விரும்புகிறது.
அதற்கான போட்டியில் ஃபிரான்ஸ் நாட்டை சேர்ந்த டஸ்ஸால்ட் நிறுவனம் ரஃபேல் போர் விமானத்தின் கடற்படை வடிவத்தை இந்தியாவிற்கு விற்க மிகவும் ஆர்வமாக உள்ளது.
ஆனால் இதற்கான சோதனைகளின் போது இந்த விமானங்கள் நிஜ கப்பலில் இருந்து இயங்காமல் கடலோரத்தில் அமைக்கப்படும் சோதனை தளத்தில் இயங்கும் என கூறப்படுகிறது.
இதற்கான சரியான காலகட்டம் இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில் டஸ்ஸால்ட் நிறுவனம் வரும் ஜனவரி மாதம் ரஃபேல் எம் விமானத்தை இந்தியா கொண்டு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ரஃபேல் எம் ரக போர் விமானத்தை தான் ஃபிரான்ஸ் நாட்டின் கடற்படையும் தனது விமானந்தாங்கி கப்பலில் பயன்படுத்தி வருகிறது என்பது கூடுதல் தகவல்.