காஷ்மீரில் வெளி மாநில தொழிலாளர்கள் மீதான தாக்குதலுக்கு பொறுப்பேற்ற மர்ம இயக்கம் !!

  • Tamil Defense
  • October 19, 2021
  • Comments Off on காஷ்மீரில் வெளி மாநில தொழிலாளர்கள் மீதான தாக்குதலுக்கு பொறுப்பேற்ற மர்ம இயக்கம் !!

ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாகவே அங்கு பணிபுரியும் அல்லது தொழில் செய்யும் பிற மாநிலத்தவர் மீது தாக்குதல் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் கடைசியாக ராஜா ரெஷி மற்றும் ஜோகிந்தர் ரெஷி ஆகிய பீஹார் மாநிலத்தவர் மீது ஞாயிறன்று குல்காம் மாவட்டத்தில் உள்ள வான்போ பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டு இருவரும் உயிர் இழந்தனர்.

இந்த தாக்குதல்களுக்கு ஐக்கிய விடுதலை முன்னணி (United Liberation Front) எனும் புதிய மர்மமான அமைப்பு பொறுப்பேற்று உள்ளது.

பீஹாரில் 200 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதற்கு இது பதில் தாக்குதல் எனவும் காஷ்மீரை விட்டு வெளி மாநிலத்தவர் அனைவரும் வெளியேற வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.