கடந்த புதன்கிழமை அன்று இந்திய மற்றும் ஆஸ்திரேலிய கடற்படைகள் இருதரப்பு பேச்சுவார்த்தைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டனர்.
இந்த ஒப்பந்தம் இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தின் அமைதி பாதுகாப்பு ஸ்திரத்தன்மை மற்றும் வளம் ஆகியவற்றை சார்ந்த இருதரப்பு பங்களிப்பை மேலும் மேலும் வலுப்படுத்தும்.
மேலும் இந்த ஒப்பந்தம் மூலமாக இருதரப்புக்கும் இடையேயான வெளிப்படைத்தன்மை புரிதல் நம்பிக்கை நல்லெண்ணம் ஆகியவை மேலும் அதிகரிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய கடற்படை தனது வரலாற்றில் முதல் முறையாக இப்போது தான் மற்றொரு நாட்டின் கடற்படையுடன் இத்தகைய ஒப்பந்தத்தை மேற்கொண்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இந்திய கடற்படை சார்பில் ரியர் அட்மிரல் ஜஸ்வீந்தர் சிங் மற்றும் ஆஸ்திரேலிய கடற்படை சார்பில் ரியர் அட்மிரல் கிறிஸ்டஃபர் ஸ்மித் ஆகியோர் கையெழுத்திட்டனர்.