
நான்கு க்வாட் நாடுகளின் கடற்படைகளும் பங்கு பெறும் மலபார் கடற்படை போர் பயிற்சிகளின் இரண்டாம் கட்டம் விரைவில் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.
வங்க கடலில் நடைபெற உள்ள இந்த இரண்டாம் கட்ட மலபார் பயிற்சியானது முதல் கட்ட பயிற்சிகள் நிறைவு பெற்ற ஆறு வாரத்திற்குள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த வருடம் தான் முதல்முறையாக மலபார் பயிற்சிகள் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது அதுவும் அரபிக்கடல் மற்றும் வங்க கடல் என இரு வேறு பகுதிளில் நடைபெற உள்ளது என்பதும் கூடுதல் சிறப்பு.
இந்த பயிற்சியில் ஜப்பானுடைய ஹெலி கேரியர் ஜே.எஸ். காகா மற்றும் அமெரிக்க கடற்படையின் யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன் ஆகியவை பங்கு பெற உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.