
நேற்று கேரள மாநிலம் கொச்சியில் இருந்து இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானந்தாங்கி கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்த் தனது இரண்டாவது கடல் சோதனையை துவக்கியது.
இந்த ராட்சத 40,000 டன் எடை கொண்ட விமானந்தாங்கி கப்பல் ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் ஐந்து நாட்கள் நீடித்த முதலாவது சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது குறிப்பிடத்தக்கது.

அப்போது இந்திய கடற்படை ஐ.என்.எஸ் விக்ராந்த் கப்பலின் அனைத்து தொழில்நுட்ப அமைப்புகளும் எவ்வித பிரச்சினையும் இன்றி வெற்றிகரமாக இயங்கியதாக அறிவித்தது.

மிக்29கே போர்விமானங்கள், காமோவ்-31 மற்றும் எம்.ஹெச்60 ரோமியோ ஹெலிகாப்டர்கள், 1700 அதிகாரிகள் மற்றும் வீரர்களுடன் இயங்கும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.