திருப்பூர் அமராவதி ராணுவ பள்ளியில் முதன்முறையாக மாணவிகள் சேர்ப்பு

  • Tamil Defense
  • October 8, 2021
  • Comments Off on திருப்பூர் அமராவதி ராணுவ பள்ளியில் முதன்முறையாக மாணவிகள் சேர்ப்பு

திருப்பூர் மாவட்டம் அமராவதிநகர் ராணுவ பள்ளி பல ஆண்டுகளாக தேசிய பாதுகாப்பு அகாடமிக்கு மாணவர்களை அனுப்பி வரும் பணியை செய்து வருகிறது.

இந்த பள்ளியில் பயின்ற பல தமிழக மாணவர்கள் முப்படைகளில் உயர் பதவிகளில் உள்ளனர்.

அந்த வகையில் முன்னாள் தரைப்படை துணை தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் தேவராஜ் அன்பு, முன்னாள் கடற்படை துணை தளபதி வைஸ் அட்மிரல் அஷோக் குமார் ஆகியோர் இங்கு பயின்றோர் ஆவர்.

தற்போது முதல்முறையாக இந்த பள்ளியில் மாணவிகள் 6ஆம் வகுப்பில் அனுமதிக்கப்பட்டு வகுப்புகள் துவங்கி உள்ளன, நேற்று அவர்கள் அணைவரும் பள்ளிக்கு சென்று சேர்ந்தனர்.

அவர்களின் வசதிக்காக தென்னக கடற்படை தளபதியின் உத்தரவின் பேரில் புதிய மாணவிகள் தங்கும் விடுதியும் அமைக்கப்பட்டு உள்ளது.

மேலும் இந்த விடுதிக்கு சீவகங்கை சீமையின் வீரமங்கையான ஆங்கிலேய எதிர்ப்பு போராளி ராணி வேலு நாச்சியாரின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.

விடுதியில் ராணி வேலு நாச்சியாரின் முழு உருவப்படமும் பள்ளியின் தாளாளரால் திறந்து வைக்கப்பட்டு உள்ளது என்பது கூடுதல் தகவல் ஆகும்.