2 குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரை விட்டு சென்ற பஞ்சாப் ராணுவ வீரர் !!

  • Tamil Defense
  • October 14, 2021
  • Comments Off on 2 குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரை விட்டு சென்ற பஞ்சாப் ராணுவ வீரர் !!

பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் பகுதியை சேர்ந்தவர் நாயக் மந்தீப் சிங் சீக் லைட் இன்ஃபான்ட்ரி ரெஜிமென்ட்டில் இடைநிலை அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

சில நாட்கள் முன்பு பூஞ்ச் செக்டாரில் நடைபெற்ற சண்டையில் வீரமரணம் அடைந்த அவரின் உடலுக்கு நேற்று ராணுவ மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அவரது மனைவி மந்தீப் கவுர் கூறும்போது நாட்டிற்காக தன்னுயிர் ஈந்த எனது கணவரை நினைத்து பெருமை அடைகிறேன் என கண்ணீர் மல்க கூறினார்.

இவன்களுக்கு 3 வயதில் ஒரு மகனும் வெறுமனே 2 மாதங்கள் ஆன மற்றொரு ஆண் குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது.