இந்தியா டூடே கான்க்ளேவ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் இந்திய வெளியுறவு செயலர் ஷிவ்ஷங்கர் மேனன் சில முக்கிய கருத்துக்களை முன்வைத்தார்.
அதாவது ஆசியாவில் அதிகார சமநிலை பாதிக்கப்பட்டு இந்தியாவுக்கு எதிராக திரும்பி உள்ளதாகவும் அது சீனா பக்கம் சாய்ந்து நிற்பதாகவும் அவர் கூறினார்.
1980களில் இரண்டு நாடுகளும் ஒரே அளவீடுகளை கொண்டிருந்தன பின்னர் சீனாவின் அசுரத்தனமான பொருளாதார வளர்ச்சி அதன் திறன்களை பன்மடங்கு அதிகரித்து கொண்டே இருக்கிறது.
ஆனால் பின்தங்கிய நாம் தற்போது அதன் விளைவுகளை அனுபவித்து வருகிறோம் இதற்கு தீர்வு இந்தியா வருடத்திற்கு 12% அளவிலான வளர்ச்சியை எட்டி தொடர்ந்து வளர வேண்டியதே ஆகும் என்றார்.