பூஞ்ச் ஆபரேஷன் 15ஆம் நாள் மீண்டும் தொடங்கிய துப்பாக்கி சண்டை !!

  • Tamil Defense
  • October 26, 2021
  • Comments Off on பூஞ்ச் ஆபரேஷன் 15ஆம் நாள் மீண்டும் தொடங்கிய துப்பாக்கி சண்டை !!

பூஞ்ச் செக்டாரில் நடைபெற்று வரும் சண்டை நேற்றுடன் 15 நாட்களை எட்டியுள்ளது, தொடர்ந்து ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளை தேடி வருகின்றனர்.

இந்த நிலையில் பட்டி துர்ரியான் வனப்பகுதியில் நேற்று துப்பாக்கி சண்டை முண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, பயங்கரவாதிகள் சுற்றி வளைக்கப்பட்டனரா அல்லது இருதரப்பு சந்திப்பால் ஏற்பட்ட சண்டையா என மேலதிக தகவல்கள் இல்லை.

இந்த அடர்ந்த வனப்பகுதி பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்டங்களின் எல்லையில் அமைந்துள்ளது, அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் குகைளை பயங்கரவாதிகள் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.