
கடந்த அக்டோபர் 13ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் செக்டாரில் 5 ராணுவ வீரர்களை கொன்ற பயங்கரவாத குழுவின் உறுப்பினர்கள் சிலர் ரஜோரி காடுகளில் பதுங்கினர்.
ஐந்து வீரர்களின் மரணத்திற்கு காரணமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட பிறகே ரஜோரி காடுகளில் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகள் பற்றிய தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து ராணுவம் ஆபரேஷனுக்கு உத்தரவிட்டது, அதன்படி கடந்த 11 நாட்களாக நடைபெற்று வந்த ஆபரேஷன் இன்று 12ஆவது நாளை எட்டியுள்ளது.
இந்த ஆபரேனில் 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர், ஆக இதுவரை 2 இடைநிலை அதிகாரிகள் 7 வீரர்கள் உட்பட மொத்தத்தில் 9 ராணுவத்தினர் வீரமரணம் அடைந்துளள்னர்.
இந்த ஆபரேஷன் கடந்த 1999ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெறும் மிகப்பெரிய ராணுவ நடவடிக்கை ஆகும், ரஜோரி காட்டு பகுதி முழுவதும் ராணுவத்தின் கட்டுபாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.
சுமார் 3000 வீரர்கள் இரவு பகலாக ஒய்வின்றி பயங்கரவாதிகளை அடர்ந்த காடுகளில் தேடி வருகின்றனர், சுமார் 11 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட காட்டுபகுதி ராணுவ கட்டுபாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.