
தொடர்ந்து 10 நாட்களாக பூஞ்ச் செக்டாரில் உள்ள ரஜோரி காடுகளில் நடைபெற்று வரும் என்கவுன்டர் 2009க்கு பிறகு ராணுவத்தின் மிகப்பெரிய ஆபரேஷனாக தற்போது உள்ளது.
சுமார் 13 ஆண்டுகளுக்கு முன்னர் இதை பூஞ்ச் செக்டாரில் ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை ஒன்பது நாட்கள் நடைபெற்ற ஆபரேஷனில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் மேலும் 1 இடைநிலை அதிகாரி உட்பட 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
தற்போது நடைபெற்று வரும் ஆபரேஷன் 10ஆவது நாளை எட்டியுள்ளது இதுவரை 2 இடைநிலை அதிகாரிகள் உட்பட 9 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர், 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர்.
எஞ்சியுள்ள பயங்கரவாதிகளை பாரா சிறப்பு படையினர், ஆளில்லா விமானங்கள் இதர அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பயங்கரவாதிகளை காடுகளில் படையினர் தேடி வருகின்றனர்.
மேலும் ஊடகத்துறையினருக்கு காட்டு பகுதியில் இருந்து 11கிலோமீட்டர் சுற்றளவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது மேலும் பொதுமக்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்கும்படி ராணுவம் அறிவுறுத்தியுள்ளது.
நாளையதினம் 11 நாளை இந்த ஆபரேஷன் எட்டும் பட்சத்தில் கார்கிலுக்கு பிறகு இந்திய ராணுவம் நடத்தும் மிகப்பெரிய நீண்ட நெடிய ஆபரேனாக இது பெயர் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு வருடத்திற்கும் மேலாக சீன எல்லையோரம் படைகள் தொடர்ந்து நிலை நிறுத்தப்பட்டு உள்ளதால் பாகிஸ்தான் எல்லையோரம் சற்றே ஊடுருவல் தடுப்பு நடவடிக்கைகள் தொய்வடைந்துள்ளது மற்றொரு காரணமாக கூறப்படுகிறது.