
ஜம்மு காஷ்மீரில் மத்திய ரிசர்வ் காவல்படைக்கு 10 இடங்களில் நிரந்தர உறைவிடம் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்து உத்தரவு பிறப்பித்தது அம்மாநில அரசு.
மத்திய ரிசர்வ் காவல்படைக்கு புல்வாமாவில்-1, ஷோபியான் மற்றும் அனந்தனாக் பகுதியில் தலா 3 என மொத்தத்தில் 65 ஏக்கர் பரப்பளவில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.
காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஒழிக்க மத்திய ரிசர்வ் காவல்படை அழைக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை சரியான உறைவிடங்கள் இல்லாமல் வீரர்கள் திணறியது குறிப்பிடத்தக்கது.
இந்த இடங்களின் உரிமை எந்த தனி நபருக்கும் இல்லை எனவும் மாறாக மத்திய ரிசர்வ் காவல்படையிடமே இருக்கும் என கூறப்படுகிறது.