காஷ்மீரில் கலவரம் உண்டாக்க பாகிஸ்தான் வகுத்த 22 அம்ச திட்டத்தை கண்டுபிடித்த இந்தியா அவை என்ன உள்ளே !!

  • Tamil Defense
  • October 20, 2021
  • Comments Off on காஷ்மீரில் கலவரம் உண்டாக்க பாகிஸ்தான் வகுத்த 22 அம்ச திட்டத்தை கண்டுபிடித்த இந்தியா அவை என்ன உள்ளே !!

பாகிஸ்தான் நாட்டின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ ஜம்மு காஷ்மீரில் அமைதியை சீர்குலைக்க வகுத்த ரகசிய திட்டத்தை இந்தியா கண்டுபிடித்து உள்ளது.

இந்த திட்டத்தில் சுமார் 22 அம்சங்கள் இடம்பெற்றுள்ளன அவற்றை வரிசையாக பார்க்கலாம்,

1) காஷ்மீரில் உள்ள பிற மாநிலத்தவரை குறி வைப்பது

2)காஷ்மீர் வரும் பிற பகுதி மக்களை குறி வைத்தல்

3) மீண்டும் காஷ்மீர் திரும்பிய காஷ்மீர் பண்டிட்டுகளை குறி வைப்பது

4) அரசு/ தனியார் துறையில் பணிபுரியும் பிற மாநிலத்தவர்களை குறிவைப்பது

5) பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடும் காவல்துறையினரின் வீடுகளை குறிவைப்பது

6)பகற மாநிலத்தவர்கள் எங்கிருந்தாலும் காஷ்மீரை விட்டு வெளியேறும்படி மிரட்டுவது

7) பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுப்போர் மீது கற்கள் பெட்ரோல் குண்டுகள் வீசி தாக்குவது

8) அரசு உத்தரவுகளை எதிர்க்கும்படி அரசு பணியாளர்களை பணித்தல்,

9) ராணுவம் மற்றும் துணை ராணுவத்தில் பணிபுரியும் காஷ்மீரிகளை குறி வைப்பது

10) அரசு அல்லது அரசு ஆதரவாளர்கள் நடத்தும் விளையாட்டு போட்டிகளை புறக்கணிப்பது

11) மீண்டும் காஷ்மீர் திரும்பும் பண்டிட்டுகளை வரவேற்க கூடாது

12) அரசுடன் இணைந்து செயல்படும் கல்வி நிறுவன அதிகாரிகளை குறி வைப்பது,

13) அரசுடன் இணைந்து செயல்படும் ஊடகங்களை புறக்கணிப்பது

14) அரசு ராணுவம் துணை ராணுவம் மற்றும் காவல்துறை ஆகியவற்றிடம் இருந்து தள்ளி இருப்பது

15) அனைத்து இந்திய ஆதரவாளர்களின் அடையாளங்களை கண்டுபிடித்தல்

16) காஷ்மீர் விடுதலையை கணக்கில் கொண்டு இலக்குகளை அடையாளம் காண்பது

17) காஷ்மீரிகள் பிற மாநிலத்தவரை நம்பி இருப்பதை தவிர்த்தல்

18) காஷ்மீர் விடுதலைக்கு எதிரானோரிடம் இருந்து தள்ளியே இருப்பது

19) பிற மாநிலத்தவரால் காஷ்மீரில் பாதிப்பு ஏற்படும் என புரிய வைப்பது

20) எந்த பணியில் இருந்தாலும் அத்தியாவசிய சேவைகள் ஆனாலும் கூட பிற மாநிலத்தவரை குறிவைப்பது

21) காஷ்மீரில் பிற மாநிலத்தவர் பணியாற்றுவதை போல பிற மாநிலங்களிலும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

22) பள்ளிகள் கல்லூரிகள் சாலைகள் பாலங்கள் என அரசு திட்டங்களை நாசம் செய்வது

இவை தான் அந்த 22 அம்சங்கள், மேலும் அசாம் மாநிலத்திலும் தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ விரும்புவதாகவும் அல்கொய்தா காஷ்மீர் மற்றும் அசாமில் ஜிஹாத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.