பாக் பெண்ணுடன் ராணுவ ரகசியங்களை பகிர்ந்த ராணுவ பணியாளர் கைது !!

  • Tamil Defense
  • October 15, 2021
  • Comments Off on பாக் பெண்ணுடன் ராணுவ ரகசியங்களை பகிர்ந்த ராணுவ பணியாளர் கைது !!

இந்திய தரைப்படையில் மல்டி டாஸ்கிங் பணியில் பணியாற்றி வந்த ராம் சிங் என்பவன் பாகிஸ்தானை சேர்ந்த பெண்ணுடன் ராணுவ ரகசியங்களை பகிர்ந்தால் கைது செய்பட்டுள்ளான்.

அந்த பெண் சமுக வலைதளத்தில் அறிமுகமாகி பின்னர் படிப்படியாக நம்பிக்கையை பெற்று பின்னர் அந்தரங்க உறையாடல்கள் நடைபெற்றுள்ளன.

இதை வைத்து கொண்டு அவனை ப்ளாக்மெயில் செய்து தகவல்களை பெற்றிருக்கிறாள்,இதை மோப்பம் பிடித்த உளவுத்துறை அவனை ஜோத்பூரில் கைது செய்தது.

அவன் மூலமாக அப்பெண்ணுடைய விவரங்களை பெற்று கொண்ட உளவுத்துறை அவனை ஜெய்ப்பூர் நகருக்கு கொண்டு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.