
பாகிஸ்தானை சேர்ந்த மொஹம்மது அஷ்ரஃப் கடந்த 14 ஆண்டுகளாக அலி அஹமது நூரி என்ற பெயரில் பீர் மவுலானா என்ற அடைமொழியுடன் தலைநகர் தில்லியின் லஷ்மி நகர் பகுதியில் வசித்து வந்துள்ளான்.
இதை பற்றி பேசி துணை கமிஷனர் குஷ்வாஹா, அஷ்ரப் இந்தியாவில் செயல்பாட்டில் இருக்கும் ஸ்லீப்பர் செல் குழுக்களின் தலைவனாக இயங்கி வருவதாகவும்
ஏற்கனவே ஜம்மு காஷ்மீர் மற்றும் நாட்டின் பல பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு பயங்கரவாத செயல்களில் இவனுக்கு தொடர்பு உள்ளதாகவும் சந்தேகம் உள்ளதாக கூறினார்.
40 வயதாகும் அஷ்ரஃப் கடந்த 14 வருடமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இடம் மாறியும் அடையாளங்களை மாற்றி கொண்டும் பாக் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயின் உத்தரவின்படி வசித்து வந்தது தெரிய வந்துள்ளது.
ஸ்லீப்பர் செல் குழுக்களின் தலைவன் எதிர்வரும் பண்டிகை காலத்தில் தாக்குதல் நடத்த திட்டமிட்டு ஆயுதங்களை கொள்முதல் செய்து வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அஷ்ரஃப் கைது செய்யப்பட்டு உள்ளான்.
அவனிடம் இருந்து ஒரு ஏகே47, ஒரு கைத்துப்பாக்கி, ஒரு கையெறி குண்டு மற்றும் 110 தோட்டாக்கள் ஒரு மேகஸின் ஆகியவை கைப்பற்றப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.