சீன வான் பாதுகாப்பு அமைப்பை படையில் இணைத்த பாகிஸ்தான் தரைப்படை !!
1 min read

சீன வான் பாதுகாப்பு அமைப்பை படையில் இணைத்த பாகிஸ்தான் தரைப்படை !!

அக்டோபர் 14ஆம் தேதி HQ-9/P எனும் தொலைதூர மற்றும் இடைத்தூர ஏவுகணைகள் கொண்ட வான் பாதுகாப்பு அமைப்பை பாகிஸ்தான் தரைப்படை படையில் இணைத்தது.

பாகிஸ்தான் தரைப்படை தலைமை தளபதியான ஜெனரல் கமார் ஜாவேத் பாஜ்வா கராச்சியில் உள்ள வான் பாதுகாப்பு படை பிரிவு மையத்திற்கு இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு சென்றார்.

அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் மேற்குறிப்பிட்ட HQ-9/P தொலைதூர மற்றும் இடைத்தூர வான் பாதுகாப்பு அமைப்பை படையில் இணைத்த பிறகு வான் பாதுகாப்பு படைப்பிரிவின் தளபதி லெஃப்டினன்ட் ஜெனரல் ஹமுத் உஸ் ஸமான் இந்த அமைப்பு பற்றி ஜெனரல் பாஜ்வாவிற்கு விளக்கினார்.

இந்த அமைப்பை படையில் சேர்த்ததன் மூலமாக பாகிஸ்தானுடைய வான் பாதுகாப்பு பன்மடங்கு பலபட்டிருப்பதாகவும் மிக மிக நெருக்கமான பாதுகாப்பு அமைப்பாகவும் இது விளங்குவதாகவும் கூறப்படுகிறது.

இந்த வான் பாதுகாப்பு அமைப்பானது பல்வேறு வகையான ஏவுகணைகள் க்ரூஸ் ஏவுகணைகள், தொலைதூர ஆயுதங்கள் ஆகியவற்றை சுமார் 100 கிலோமீட்டர் தொலைவிலேயே இடைமறித்து தாக்கி அழிக்கும் ஆற்றல் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெனரல் பாஜ்வா பேசும்போது இத்தகைய அதிநவீன தளவாடங்களை படையில் இணைப்பதன் மூலமாக பாகிஸ்தானுடைய வான் பாதுகாப்பு பன்மடங்கு வலுப்படும் எனவும் தாய்நாடு பாதுகாப்பாக இருக்கும் எனவும் கூறினார்.