
காஷ்மீர் விவகாரத்தில் துருக்கி தனது நிலைப்பாட்டை தளர்த்தியதாக கருதும் பாகிஸ்தான் சற்றே கோபத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில ஆண்டுகளாகவே பாகிஸ்தான் மற்றும் துருக்கி இடையேயான உறவுகள் பலமடைந்ததும் ஆயுத வியாபாரம் வரை சென்றதும் ஒரு பக்கம் இருந்தாலும்
பாகிஸ்தான் காஷ்மீர் விவகாரத்தில் துருக்கி தனது நிலைபாட்டை தளர்த்துவதை முற்றிலும் விரும்பவில்லை,
ஆனால் துருக்கி தற்போது அமைதியாக காரணம் அதன் பொருளாதாரம் மோசமடைந்தது மற்றும் நிதி நடவடிக்கை பணிக்குழுவின் பட்டியலில் சேர்க்கப்பட்டதும் காரணம் என கூறப்படுகிறது.
ஆகவே துருக்கி தற்பொது உலகளாவிய ரீதியில் உதவி திரட்டும் பணியில் மும்மரமாக உள்ளது இதற்காக ஏற்கனவே பகைத்து கொண்ட சவுதி எகிப்து அமீரகம் ஆகிய நாடுகளுடன் உறவுகளை சீர்படுத்த எர்டோகான் விரும்புகிறார்.