
மத்திய அரசின் ஆயுத தொழிற்சாலைகள் வாரியத்தை கலைக்கும் திட்டம் நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது.
இதன்மூலம் 200 வருட பழைமமிக்க நிறுவனத்தின் 70,000 பணியாளர்கள் ஏழு குழுமங்களின் கீழ் பணியமர்த்தப்படுவர்.
ஆனால் இந்த ஏழு குழுமங்களும் மத்திய அரசின் இயங்கும் என கூறப்படுகிறது, அவையாவன NIML, AVNL, AWEIL,TCL, YIL, IOL மற்றும் GIL.
அனைத்து ஆயுத தொழிற்சாலை வாரிய பணியாளர்களும் ஒட்டுமொத்தமாக இந்த ஏழு நிறுவனங்களிலும் பணியமர்த்தப்பட உள்ளனர் இதற்கான உத்தரவு செப்டம்பர் 24 அன்று பிறப்பிக்கப்பட்டது.
முதலில் ஏழு நிறுவனங்களும் கார்ப்பரேட் முறையில் இயங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஆயுத தொழிற்சாலைகள் வாரியத்தை போன்றே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே இதனால் ஆயுத தயாரிப்பில் எதிர்பார்க்கப்படும் மாற்றம் நிகழுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி தான் ..