ஜம்மு காஷ்மீர் என்கவுன்டர் 1 ராணுவ வீரர் வீரமரணம் !!

  • Tamil Defense
  • October 21, 2021
  • Comments Off on ஜம்மு காஷ்மீர் என்கவுன்டர் 1 ராணுவ வீரர் வீரமரணம் !!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஷோபியான் பகுதியில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார்.

மேலும் இந்த ஆபரேஷனில் 2 லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் அவர்களில் ஒருவன் ஆதில் வானி என்பதும்,

மூன்று நாட்களுக்கு முன்னர் புல்வாமா பகுதியில் தச்சு வேலை செய்து வந்த உத்தர பிரதேச மாநிலத்தின் சஹாரன்பூரை சேர்ந்த வெளிமாநில தொழிலாளரை கொன்றவன் என்பதும் தெரிய வந்துள்ளது.

வீரமரணம் அடைந்த வீரர் ராஜ்புத் ரெஜிமென்ட்டை சேர்ந்த சிப்பாய் கரன்வீர் சிங் ஆவார் இவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.