ஶ்ரீநகர் ஜம்மு விமானப்படை தளங்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த NSG ! என்ன காரணம் ?

  • Tamil Defense
  • October 17, 2021
  • Comments Off on ஶ்ரீநகர் ஜம்மு விமானப்படை தளங்களை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த NSG ! என்ன காரணம் ?

ஶ்ரீநகர் ஜம்மு விமானப்படை தளங்களை பாதுகாக்க களமிறக்கப்பட்ட NSG !!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள ஜம்மு மற்றும் ஶ்ரீநகர் விமானப்படை தளங்களை பாதுகாக்க NSG களமிறக்கப்பட்டு உள்ளது.

இந்த தகவலை நேற்று மானேசரில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு படையின் 37ஆவது ஆண்டு விழாவில் அதன் இயக்குனர் ஜெனரல் எம் ஏ கணபதி தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு படை அங்கு தகுந்த ட்ரோன் எதிர்ப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்பு நிறுவப்படும் வரை பாதுகாப்பு பணியில் ஈடுபடும் எனவும் தற்போது வயை சிறப்பாக செயல்பட்டு வருதாகவும் கூறினார்.

ஜம்மு நகரில் உள்ள விமானப்படை தளத்தில் கடந்த ஜூன் 27 அன்று முதல்முறையாக ட்ரோன் தாக்குதல் நடைபெற்றதும் இதில் இரு விமானப்படை வீரர்கள் காயமடைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.