
மத்திய உள்துறை அமைச்சரான திரு.அமித்ஷா தேசிய பாதுகாப்பு படையின் 37ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது தேசிய பாதுகாப்பு படை ஒர் உலகத்தரம் வாய்ந்த பயங்கரவாத எதிர்ப்பு படை நமது வீரர்களை நினைத்து நாடே பெருமை அடைகிறது என வாழ்த்தினார்.
தேசிய பாதுகாப்பு படையானது கடத்தல் பணய கைதிகள் மீட்பு பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற படை என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்த படையில் ராணுவம் துணை ராணுவம் மற்றும் மாநில காவல்துறை வீரர்கள் பணியாற்றுவர் என்பது கூடுதல் தகவல்.