
இந்தியாவுக்கான புதிய இஸ்ரேலிய தூதரான நோவர் கிலோன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்த பின்னர் முதல் முறையாக இந்திய ஊடகங்களிடம் பேசினார்.
அப்போது அவர் இந்தியா அமெரிக்கா ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இஸ்ரேல் அடங்கிய புதிய க்வாட் அமைப்பின் உருவாக்கம் பற்றி பேசினார்.
அவர் பேசும்போது முதல்முறையாக இக்கூட்டமைப்பின் அமைச்சர்கள் சந்தித்த போது ஒவ்வொரு நாடும் தங்களது பிரச்சினைகளை முன்வைத்த போது இந்தியா ஈரான் உடனான தனது உறவுகளையும் முன்வைத்ததாக கூறினார.
ஈரான் விவகாரத்தில் இஸ்ரேல் அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் ஒருமித்த கருத்துடன் உள்ளன ஆனால் இந்தியாவோ ஈரானுடன் நட்புறவை பேணும் நாடு என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் நோவர் கிலோன் பேசுகையில் நான்கு நாடுகளுக்கும் இடையே மிகப்பெரிய புரிதல் உள்ளதாகவும் பல்வேறு துறைகளில் இணைந்து செயல்பட உள்ளதாகவும் பேசினார்.
அவரிடம் ஊடகத்தினர் இக்கூட்டமைப்பு ராணுவ ரீதியான உறவுகளை கொண்டிருக்குமா என கேட்டதற்கு இந்தியா மற்றும் அமீரகத்துடன் எந்த கூட்டணியையும் வைக்க தயாராக உள்ளோம் என்றார்.
இந்தியா அமெரிக்கா ஜப்பான் ஆஸ்திரேலியா அடங்கிய க்வாட் அமைப்பு ராணுவ கூட்டமைப்பாக உருமாற்றம் அடையாமல் இருப்பதற்கு இந்தியா காரணமாகும் ஆகவே இந்த கூட்டமைப்பின் எதிர்காலத்தை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.