காஷ்மீரில் தாக்குதல்களை தடுக்க புதிய பாதுகாப்பு திட்டம் அமல்படுத்த திட்டம் !!
1 min read

காஷ்மீரில் தாக்குதல்களை தடுக்க புதிய பாதுகாப்பு திட்டம் அமல்படுத்த திட்டம் !!

ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் நடைபெற்ற அப்பாவி மக்களின் கொலைகளை தொடர்ந்து இத்தகைய தாக்குதல்களை தடுக்கும் வகையில் புதிய ஒருங்கிணைந்த பாதுகாப்பு திட்டம் ஒன்றை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த திட்டத்தின்கீழ் ஜம்மு காஷ்மீர் காவல்துறை முதன்மை அமைப்பாக செயல்படும் மேலும் பிற பாதுகாப்பு படைகளுடனும் இணைந்து தாக்குதல்களை தடுக்க பணியாற்றும் என கூறப்படுகிறது.

இது பற்றி ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் மூத்த அதிகாரிகள் கடந்த 23ஆம் தேதியன்று மத்திய அமைச்சரிடம் தங்களது திட்டங்களை முன்மொழிந்தனர்.

அப்போது அவர்கள் மின்னனு கண்காணிப்பு, பொது இடங்களில் தீவிர ரோந்து, உளவு நெட்வொர்க்கை பலப்படுத்துதல், முக்கிய இடங்களில் சோதனை சாவடிகள் மற்றும் பாதுகாப்பு தடுப்புகள் அமைப்பது போன்றவற்றை முன்மொழிந்து உள்ளனர்.

மேலும் மின்னனு கண்காணிப்பு திறன்களில் ஒன்றான கண்காணிப்பு கேமராக்களை பயன்படுத்தி உடனுக்குடன் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் காவலர்களை அலர்ட் செய்வதும் இதில் அடங்கும்.

உளவுத்துறை அமைப்புகள் மற்றும் தேசிய புலனாய்வு முகமை ஆகியவை காஷ்மீரில் இயங்கி வரும் முக்கிய பயங்கரவாதிகள் பற்றிய தகவல்களை திரட்டும் பணியில் ஈடுபடுவர் மேலும் 80 பயங்கரவாதிகளின் குடும்பங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

மேற்குறிப்பிட்ட சந்திப்பு ஶ்ரீநகரில் நடைபெற்றதாகவும் இதில் ஐ.பி தலைவர் அரவிந்த் குமார், சி.ஆர்.பி.எஃப் தலைவர் குல்தீப் சிங், பி.எஸ்.எஃப் தலைவர் பங்கஜ் சிங், என்.எஸ்.ஜி தலைவர் கணபதி, ஜம்மு காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் ஆகியோர் பங்கு பெற்றுள்ளனர்.