சீனாவின் புதிய தொலைதூர லாயல் விங்மேன் ரக ஆளில்லா விமானம் !!
1 min read

சீனாவின் புதிய தொலைதூர லாயல் விங்மேன் ரக ஆளில்லா விமானம் !!

சீனாவின் மிகப்பெரிய விமான கண்காட்சி சூகாய் நகரத்தில் நடைபெற்று வருகிறது அங்கு தனது பல்வேறு தளவாடங்களையும் காட்சிபடுத்தி உள்ளது.

அங்கு சீனா தனது புதிய FH-97 ரக தொலைதூர ஆளில்லா விமானத்தை காட்சிபடுத்தி உள்ளது இதனை சீன ஏரோஸ்பேஸ் அறிவியல் தொழில்நுட்ப குழுமம் வடிவமைத்து தயாரித்து உள்ளது.

இந்த ஆளில்லா விமானமானது லாயல் விங்மேன் ரகத்தை சேர்ந்தது ஆகும், தற்போது அமெரிக்கா ரஷ்யா இந்தியா பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இதற்கான பணிகளில் ஈடுபட்டு உள்ளன.

இந்த லாயல் விங்மேன் ரக ஆளில்லா விமானங்கள் வழக்கமான போர் விமானங்களுடன் சென்று அவற்றை போலவே தாக்குதல் நடத்தவும்,

விலைமதிப்பு அதிகமான வழக்கமான போர் விமானங்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் அவற்றை பாதுகாக்கவும் இவை பயன்படுத்தி கொள்ளப்படும்.

சீனா இந்த ஆளில்லா விமானத்தை சர்வதேச சந்தையில் உலகத்தரம் வாய்ந்த தளவாடமாக அறிமுகம் செய்வதன் மூலமாக ஏற்றுமதி செய்யவும் நாட்டம் காட்டுகிறது.