
விமான மேம்பாட்டு ஆணையம் மற்றும் இந்திய கடற்படை இணைந்து புதிய கடற்படை போர் விமானமான டெட்பஃப்பின் தேவைகளை இறுதி செய்துள்ளன.
இந்த தேவைகள் தான் விமானத்தின் டிசைனை வடிவமைப்பதில் மிக மிக முக்கியமான பங்கு வகிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது அதன் பிறகு பல்வேறு சோதனைகளை அடுத்து டிசைன் இறுதி செய்யப்படும்.
26 டன்கள் எடை மற்றும் இரட்டை என்ஜின் கொண்ட இந்த புதிய கடற்படை போர் விமானமானது 2025ஆம் ஆண்டு முதன்முறையாக வெளிவரும் என கூறப்படுகிறது.