உள்நாட்டு கொள்முதலில் தன்னிறைவு பெறும் பொருட்டு இந்திய கடற்படை கோவையில் இயங்கி வரும் தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
கடந்த 27ஆம் தேதி கோவையில் அமைந்துள்ள ஐ.என்.எஸ் அக்ரானி கடற்படை தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவை கொடிஸியா தொழில் முனைவோர் அமைப்பினரும்,
தளத்தின் கட்டளை அதிகாரி கமோடர் யோகேஷ் பாண்டே, கொச்சி கடற்படை விமான தளத்தின் கட்டளை அதிகாரி மற்றும் ஐந்து பிற அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது விமானம் மற்றும் கப்பல்களுக்கான உதிரி பாகங்கள், இன்னபிற கருவிகள் ஆகியவற்றை தயாரித்து வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி விவாதித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.