13,000 கோடி மதிப்பில் தளவாடங்கள் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி !!

  • Tamil Defense
  • October 1, 2021
  • Comments Off on 13,000 கோடி மதிப்பில் தளவாடங்கள் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி !!

பாதுகாப்பு அமைச்சகம் சுமார் 13,165 கோடி ரூபாய் மதிப்பில் புதிய தளவாடங்களை வாங்க ராணுவத்திற்கு அனுமதி வழங்கி உள்ளது.

அதன்படி சுமார் 3850 கோடி ரூபாய் மதிப்பில் 25 அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர்கள் மற்றும் 4,962 கோடி மதிப்பில் ராக்கெட் குண்டுகள் வாங்கவும்,

7523 கோடி ரூபாய் மதிப்பில் சுமார் 118 டாங்கிகளை வாங்கவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் 11,486 கோடி ரூபாய் மதிப்பிலான தளவாடங்களை உள்நாட்டில் இருந்தே வாங்க உள்ளனர் என்பது கூடுதல் சிறப்பு ஆகும்.