1 min read
இந்திய விமானப்படையின் மிராஜ்2000 மத்திய பிரதேசத்தில் விமானம் விபத்து !!
மத்திய பிரதேச மாநிலம் பிந்த் பகுதியில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான மிராஜ்2000 ரக போர் விமானம் ஒன்று விபத்தில் சிக்கியுள்ளது.
போர் விமானத்தை இயக்கிய விமானி கடைசி நேரத்தில் எஜெக்ஷன் இருக்கை மூலம் வெளியேறி உயிர் தப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் சிக்கிய மிராஜ்2000 ரக போர் விமானம் குவாலியர் நகரில் அமைந்துள்ள மகராஜ்புரா விமானப்படை தளத்தில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்டதாக கூறப்படுகிறது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாக கூறப்படும் நிலையில் இந்திய விமானப்படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.