
சூடான் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை அந்நாட்டு ராணுவம் கைபற்றி உள்ளது, மேலும் இடைக்கால அரசாங்கத்தை கலைத்து விட்டு அவசர நிலையை நாடு முழுக்க பிரகடனம் செய்துள்ளது.
சூடான் பிரதமர் அப்தல்லா ஹம்தோக் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர், பிரதமர் கொண்டு செல்லப்பட்ட இடம் குறித்த தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.
நாடு முழுக்க வெடித்துள்ள போராட்டங்களை ஒடுக்க சூடான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அந்நாட்டு ராணுவ தளபதி ஜெனரல் அப்தல் ஃபாத்தா அப்தெல்ரஹ்மான் அல் புர்ஜான் தற்போது நாட்டின் தலைவராக பொறுப்பெற்று உள்ளார்.
அடுத்த தேர்தல்கள் நடைபெற்று எந்தவித வெளிநாட்டு ஆட்டுவிப்பும் இல்லாத அரசு நிறுவப்படும் வரை ராணுவம் அதிகாரத்தில் இருக்கும் என அறிவிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.