வீரமரணமடைந்த ராணுவ வீரரின் மகள் BSF அதிகாரிகள் பயிற்சியில் முதலாவதாக தேர்ச்சி !!

  • Tamil Defense
  • October 30, 2021
  • Comments Off on வீரமரணமடைந்த ராணுவ வீரரின் மகள் BSF அதிகாரிகள் பயிற்சியில் முதலாவதாக தேர்ச்சி !!

புதன்கிழமை அன்று மத்திய பிரதேச மாநிலம் டேகான்பூரில் உள்ள எல்லை பாதுகாப்பு படை அகாடமியில் அதிகாரிகளின் பயிற்சி நிறைவு மற்றும் அணிவகுப்பு நடைபெற்றது.

அதில் அசிஸ்டன்ட் கமாண்டன்ட் ரீது பயிற்சியில் சிறப்பாக செயல்பட்டு முதாவதாக தேர்ச்சி பெற்றதையடுத்து வீரவாள் வழங்கி கவுரவிக்கப்பட்டார்.

ஹரியானா மாநிலம் ரோஹ்தாக்கை சேர்ந்த அவர் பேசும் போது நாட்டிற்கு சேவை செய்ய ஆர்வமாக உள்ளதாகவும் சிறு வயது முதலே சீருடை அணிய வேண்டும் என்ற ஆவல் இருந்ததாகவும் கூறினார்.

அசிஸ்டன்ட் கமாண்டன்ட் ரீதுவின் தந்தை ராணுவத்தில் பணியாற்றிவர் என்பதும் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற சண்டையில் வீரமரணம் அடைந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.