
கடந்த 2002ஆம் ஆண்டு முதலாக இந்தியா மற்றும் அமெரிக்க தரைப்படைகளுக்கு இடையே யுத் அப்யாஸ் என்ற பெயரில் கூட்டு பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் இந்த வருடத்திற்கான யுத் அப்யாஸ் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது இந்த பயிற்சி அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் உள்ள எல்மன்டார்ஃப் தளத்தில் நடைபெற உள்ளது.
இந்த பயிற்சியில் இந்திய தரைப்படை சார்பில் மெட்ராஸ் ரெஜிமென்ட்டின் 7ஆவது பட்டாலியனும் அமெரிக்க தரைப்படை சார்பில் 40ஆவது கேவல்ரி ரெஜிமென்ட்டும் பங்கேற்க உள்ளன.
கடந்த முறை இந்த பயிற்சி ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றதும் இந்தியா சார்பில் ஜம்மு காஷ்மீர் ரைஃபிள்ஸ் படையணி பங்கு பெற்றதும் குறிப்பிடத்தக்கது.