காஷ்மீர்: பள்ளிகள் மற்றும் சாலைகளுக்கு வீரமரணமடைந்த வீரர்களின் பெயர்களை சூட்ட திட்டம் !!

  • Tamil Defense
  • October 31, 2021
  • Comments Off on காஷ்மீர்: பள்ளிகள் மற்றும் சாலைகளுக்கு வீரமரணமடைந்த வீரர்களின் பெயர்களை சூட்ட திட்டம் !!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பள்ளிகள் கல்லூரிகள் சாலைகள் மற்றும் முக்கியமான கட்டிடங்களுக்கு வீரதீர செயல்கள் புரிந்த பாதுகாப்பு படையினரின் பெயர்களை சூட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.

அந்த வகையில் ராணுவம் துணை ராணுவம் மற்றும் காவல்துறையை சேர்ந்த வீரமரணமடைந்த வீரர்கள், வீரதீர விருது பெற்ற வீரர்களின் பெயர்கள் தேர்வு செய்யப்பட உள்ளன.

இவர்கள் தவிர பிரபலமான கலைஞர்கள் சமுகத்தில் மதிப்பு மிக்க நபர்கள் என மொத்தமாக 108 பேரின பெயர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வெள்ளிக்கிழமை அன்று ஜம்மு காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா தலைமையில் நடைபெற்ற மாநில நிர்வாக குழு கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது.