மீண்டும் பயன்படுத்தும் ராக்கெட்டுகளை தயாரிக்க இஸ்ரோ திட்டம் !!

நமது நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ உலகின் முன்னனி விண்வெளி ஆய்வு அமைப்புகளில் ஒன்றாக திகழ்கிறது என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால் அப்படி இருந்தும் இஸ்ரோ இன்னும் சில தொழில்நுட்பங்களில் கால்பதிக்கவில்லை அவற்றில் ஒன்று தான் தற்போது உலகம் முழுவதும் அதிகமாக தாக்கம் ஏற்படுத்தியுள்ள மீண்டும் பயன்படுத்தி கொள்ளக்கூடிய ராக்கெட் தொழில்நுட்பம்.

இந்த வகை தொழில்நுட்பத்தில் தற்போது அமெரிக்காவை சேர்ந்த எலான் மஸ்க்கின் தனியார் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் நிபுணத்துவம் வாயந்ததாக விளங்கி வருகிறது என்பது கூடுதல் தகவல்.

தற்போது இந்தியாவும் இந்த தொழில்நுட்பத்தில் ஆர்வம் காட்டி வருவது தெரிய வந்துள்ளது 2022 அல்லது 2023ஆம் ஆண்டில் இந்த வகை ராக்கெட்டின் சோதனை நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வகை ராக்கெட்டுகளை செயற்கைகோள் ஏவ தயார்ப்படுத்துவது சுலபமாகும் காரணம் குறைந்த காலத்தில் ஒற்றை இலக்க நபர்களே இதனை செய்ய முடியும்

மேலும் இந்த வகை ராக்கெட்டுகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி கொள்வதன் மூலமாக பல ஆயிரம் கோடி ரூபாய் சேமிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.