தொழில்சார் கொள்கைகளை விண்வெளி துறையில் அறிமுகப்படுத்த தயாராகும் இந்தியா !!

  • Tamil Defense
  • October 20, 2021
  • Comments Off on தொழில்சார் கொள்கைகளை விண்வெளி துறையில் அறிமுகப்படுத்த தயாராகும் இந்தியா !!

நமது நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோவின் தலைவர் முனைவர் சிவன் துபாய் கண்காட்சியில் இந்திய மையத்தில் காணொளி வாயிலாக பேசினார்.

அப்போது அவர் இந்தியா விரைவில் விண்வெளி துறையில் தொழில்சார் கொள்கைகளை அறிமுகப்படுத்த உள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும் பேசும் போது சமீபத்திய மாற்றங்கள் தனியாரை ஊக்குவித்ததோடு மட்டுமின்றி அவர்களை சப்ளையர்கள் எனும் நிலையில் இருந்து பங்காளி எனும் நிலைக்கு உயர்த்தியுள்ளன என்றார்.

இந்தியா விண்வெளி ஆராய்ச்சியை உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட அதிக வாய்ப்புள்ள தளமாக பார்ப்பதாகவும் அதில் இந்திய நிறுவனங்கள் தங்களது பங்களிப்பை உலகளாவிய அளவில் கொடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

கடைசியாக அவர் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையே விண்வெளி துறையில இருக்கும் இருதரப்பு உறவுகள் மற்றும் புரிதல்களை சுட்டி காட்டினார்.