
சமீபத்தில் வெளியாகி உள்ள ரகசிய தகவல்களின்படி பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ பயங்கரவாத குழுக்களுக்கு காஷ்மீர் மக்கள் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டது அம்பலமாகி உள்ளது.
அதாவது வழக்கமான பெயர் பெற்ற பயங்கரவாதிகள் அல்லாமல் முன் பின் தெரியாத இளைஞர்களை பயன்படுத்தி கொள்கின்றனர்.
அந்த இளைஞர்கள் பயங்கரவாத இயக்கங்களின் உதவியாளர்களிடம் ஆயுதம் பெற்று கொண்டு கொலை செய்து விட்டு மீண்டும் மற்றொரு நபரிடம் ஆயுதத்தை ஒப்படைத்து விட்டு மக்களுடன் கலந்து விடுகின்றனர்.
ஆகவே இவர்களை அடையாளம் காண்பது எளிதல்ல மற்றும் எங்கு எப்போது யார் மீது தாக்குதல் நடத்தப்படும் என்பதையும் கணிக்க முடியாத சூழல் நிலவி வருகிறது.
இத்தகயை தாக்குதல் முறையின் நோக்கம் இஸ்லாமியர்கள் அல்லாதோரை காஷ்மீரை விட்டு விரட்ட வேண்டும்,
அதன் விளைவாக நாட்டின் பிற பகுதிகளில் இஸ்லாமிய மக்கள் மீதான வெறுப்பை அதிகரித்து தாக்குதல் நடத்த தூண்டுவது
மேலும் காஷ்மீர் சுற்றுலா பயணிகளை பயபடுத்தி சுற்றுலாவை முடக்கி வாழ்வாதாரம் பாதிக்க செய்து காஷ்மீர் மக்களின் கோபத்தை தூண்டுவது என மிகப்பெரிய சதி திட்டம் தீட்டப்பட்டு உள்ளது.
மேலும் இதற்காக ஐ.எஸ்.ஐ சுமார் 200 பேணை இலக்காக தேர்வு செய்து பயங்கரவாதிகளிடம் அப்பட்டியலை வழங்கி உள்ளதாகவும் தெரிகிறது.